இவள் பெண் - மாஹிரா கவிதைகள்

Ungal Nivas
0

 


நிலவை பிடித்து 
சிறு கறைகள் துடைத்து
குறுமுறுவல் பதித்த முகம்..

நிலவை பறித்து 
மன அலைகள் நிறைத்து 
சிறு நளினம் தெரிந்த விழி
 
வானவில் வண்ணம் குழைத்து   
விலை உயர் பட்டில் இழைத்த  
மேலாடை சுமக்கும் முகில்.

தரலம் அடைந்து
தவழ குலைந்து  
இரு பவளம் பதித்த இதழ் 

மிளிர் விண்மீன் பிடித்து 
பசும்பால் பாலில் கலந்து 
கரு விழிகள் பதிந்த இமை
 
தேன் கூட்டை கலைத்து 
செந்தமிழாய்  தரித்து  
கனி சொட்ட பேசும் குரல் 

முகிலை பிடித்து 
சிறு நெளியாய் கடைந்து 
இரு செவியில் திரிந்த குழல் 

தேய் பிறையை பிடித்து 
தங்கம் பதித்து 
வளம் தாங்கி நிற்கும் இடை 

செவ்வியல்  நலனும் பயின்று 
சிந்தை மயங்கி 
விந்தை வியந்து பார்க்க 
வளைந்து போகும் நடை.. 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

#buttons=(Accept !) #days=(20)

Dear Singers, Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !