சித்திரமும் நாணுதம்மா!
கொத்துமலர் அத்தனையும் உன்
கோலம் கண்டே வாடுதம்மா!.
இப்படியோர் பொக்கிஷத்தை
இணையத்திருப்பது என் பிழையன்றோ...
நேரில் உன்னை கண்டிடவே - கனவு
தேரில் ஏறி அலைகிறேனே!
நாட்கணக்கு மாதமாக
மாறியது போதும் கண்ணே
என்
வாட்டத்தின் வயது
வருடத்தை தாண்டும் முன்னே
வாய் திறந்து சொல்வாயா
வந்திடுக என்று ஒரு சொல்...
.jpeg)
