எங்கள் வீட்டில் பூத்து சிரித்த பூவோடு சேர்ந்து
மனம் பரப்புவாயாக மகனே!
எங்கள் அழகு தேவதையின் கண்ணீர் துளிகள்
ஆனந்தத்தின் சிதறல்களாகவே காண செய்வாயாக!
எங்கள் செல்லதின் ஆசைகள் நிறைவு செய்வதில்
தந்தை ஆவாயாக!
எங்கள் வீட்டின் சுட்டிப்பெண்ணை போற்றிப்
பாதுகாப்பதில் தமயன் ஆவாயாக!
எங்கள் தங்கத்தின் உணர்வுகளுக்கு மதிப்பும் சம உரிமையையும்
கொடுத்து அவளை பெருமை படுத்துவாயாக!
எங்கள் பாச மலரின் சிறு சிறு பிழைகளும் பெரிதுபடுத்தாமல்
மன்னித்து மறப்பதில் தாய்மையை வெளிப்படுத்துவாயாக
எங்கள் சுட்டி பெண் முகத்தில் தெரியும் புன்னகையை
வளர்பிறையாக வளரச்செய்வாயாக!
எங்கள் மகளின் ஸ்பரிசத்தால் நித்தம் நித்தம் நீ
புது பொலிவு பெறுவாய்!
எங்கள் மகளும், புதிதாய் பூத்த புது மலர்போல
நித்தம் நித்தம் உன்னுள் மகிழ்ச்சியை மலர செய்ய
இறைவனை வேண்டி நிற்கும் அன்பு அத்தை!!

.jpeg)